பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!

pandiyan-stores
pandiyan-stores

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் இருந்து தொடர்ந்து பல சீரியல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகிறது. மேலும் இவர்கள் தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் நம்பர் ஒன் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவியும் விளங்கி வருகிறது.

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல்  நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இளவரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் இருந்து அடுத்தடுத்து சில பிரபலங்கள் மற்ற சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பற்றி வருகிறார்கள் அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் தங்கையின் வருங்கால கணவராக நடித்து வந்த பிரபல நடிகர் விலகிய நிலையில் இவரை எடுத்து மீண்டும் மீனாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் விலகியுள்ளார்.

அதாவது ஜகார்த்தனன் இளைய மகளுக்கும் முல்லையின் அக்கா மல்லிகாவின் மகனுக்கும் சமீபத்தில் மிகவும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது எனவே விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் மீனாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவ்யஸ்ரீ விலகியுள்ளார்.

pavya sri
pavya sri

பவிஸ்ரீ ஏராளமான சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் புதிதாக அறிமுகமாக இருக்கும் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது பப்யஸ்ரீ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலினை அடுத்து நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

எனவே இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில் ஆஹா கல்யாணம் என்ற புதிய சீரியல் அறிமுகமாக இருக்கிறது இந்த சீரியலில் தான் பவ்யஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.