Bhavani : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் அமீர் மற்றும் பாவனி.. அதன் பிறகு இருவரும் சின்ன சின்ன ஆல்பம், அவ்வப்போது ஊர் சுற்றியே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எல்லாம் வெளிவந்து வைரலாகிய நிலையில் அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்தில் உருவான துணிவு.
திரைப்படத்தில் அஜித் கேங்கில் இருவரும் நடித்திருந்தனர் இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்று இவர்களை அடுத்த லெவலுக்கு தூக்கி விட்டது. அதன் பிறகு அமீர் பாவணிக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன மேலும் இருவரும் நன்கு பழகி வந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள போதெல்லாம் பேச்சுக்கள் அடிபட தொடங்கியது.
இந்த நிலையில் பாவனி அமீரை பிரேக் அப் செய்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது குறித்த விலாவாரியாக பார்ப்போம்.. பாவனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் புகைப்படம், வீடியோ மற்றும் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம் அப்படி அண்மையில் ரசிகர் ஒருவருடன் உரையாடி கொண்டிருக்கும்..
போது அந்த ரசிகர் நீங்கள் சிங்கிளா என கேட்டுள்ளார் அதற்கு ஆம் என இவர் பதில் அளித்துள்ளதால் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ அமீரை நீங்கள் கழட்டி விட்டீர்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் சிலர் இப்படி ஒன்னும் மண்ணுமாய்
இருந்த நீங்கள் பிரிந்தது வருத்தமாக உள்ளது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த செய்தியை பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் பாவனி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.