விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாவனி ரெட்டி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சீரியல்களிலும் நடித்துள்ளார் அதோடு சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தாலும் சினிமாவில் ஒரு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று வருகிறார். அனைத்து போட்டியாளர்களும் தங்களது வாழ்வில் நடந்த பல தகவல்களை பகிர்ந்து வரும் நிலையில் பவானி ரெட்டியும் தனது வாழ்வில் நடந்த உருக்கமான கதை ஒன்றை கூறிவுள்ளார்.
அதாவது என் கணவன் தற்கொலை செய்து கொண்ட பொழுது எனக்கு அழுகை வரவில்லை என்னை விட்டுட்டு போய்விட்டார் என்ற கோபம் தான் இருந்தது இந்த தகவல் அனைத்து பார்வையாளர்களையும் உருக வைத்தது. இந்நிலையில் இவரைப் பற்றிய ஏராளமான வதந்திகள் பரவி வருவதால் பாவனியின் மூத்த சகோதரி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான் சிந்து பாவனி ரெட்டியின் மூத்த சகோதரி பாவனி பற்றியும் அவள் உறவைப் பற்றியும் பல போலியான வதந்திகள் வைரலாகி வருகிறது இது குறித்து நான் விளக்க விரும்புகிறேன். பாவனி அவளது கணவரின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளவில்லை. அவள் தன் கணவரின் மீது அதிக பாசத்துடன் இருந்தார் மேலும் இவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக தம்பதியினர்களாகத்தான் இருந்தனர்.
அவர் மறைவிற்குப் பிறகு அவரின் நினைவு அவளை விட்டு நீங்கவில்லை. அவருடன் அவள் வாழ்ந்த நாட்கள் என்றென்றும் அவளுக்கு பசுமையான நினைவுகளே. ஆனால் அவள் சமீப காலங்களாக ஒருவரை விரும்பினாள். நாங்கள் குடும்பமாக அவளின் விருப்பப்படியே அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர விரும்பினோம். ஆனால் சில காரணங்களால் பரஸ்பர புரிதலுடன் சுமுகமாக பிரிந்தனர்.
அவள் கடந்த நான்கு வருடங்களாக தனது கணவரின் மறைவிற்குப் பிறகு தனது வாழ்க்கையை மிகவும் தைரியமாகவும் கண்ணியமாகவும் வாழ கற்று கொண்டாள். தனது தொழிலில் முன்னுக்கு வந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். இதன் காரணமாக அனைவரும் பாவனி ரெட்டிக்கு ஆதரவளிக்குமாறு அனைவருக்கும் நன்றி கூறி முடித்துள்ளார்.