தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் ஆறாவது சீசன் தொடங்கயுள்ளது. அதில் எந்தெந்த பிரபலங்களை கலந்து கொள்ள வைக்கலாம் என பிக்பாஸ் குழு.
தீவிரமாக கலந்தாய்வு செய்து வருகின்ற நிலையில் இந்த நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார் அதனால் அடுத்த சீசனை யார் தொகுத்து வழங்குவது என்ற குழப்பமும் மக்களிடையே இருந்துவருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் நடனக்கலைஞர் அமீர் மற்றும் சீரியல் நடிகை பாவணி இவர்கள் இருவரும் அந்த சீசனில் பெரும் பிரபலம் மேலும் அமீர் பாவணியை காதலிப்பதாக பிக் பாஸ் வீட்டில் கூறியிருந்தார்.
ஆனால் அதனை அமீர் மறுத்திருந்தார் பின்பு தற்போது ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அமீர் நடந்து கொண்ட விதம் குறித்து தற்போது பாவணி கூறியுள்ளார்.
ஒருசமயம் பிக்பாஸ் வீட்டில் பாவணிக்கு அடிபட்டு கையில் கட்டு போட்டு இருந்தார். அப்போது தனக்கு முகம் கழுவுவது, பல் துலக்குவது, தலை வாருவது என பாவணியால் முடியாதவற்றை அமீர் தான் கூட இருந்து பார்த்துக் கொண்டார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அமீர் கண்ணியம் தவறியது இல்லை என பவானி கூறியுள்ளார்.