திருமண கெட்டப்பில் பாவனி- அமீர்.! வீடியோவை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள் மேலும் பலரும் தற்பொழுது சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் னபாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. தற்பொழுது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இவர்களைப் பற்றி தான் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர்கள் அமீர் பாவனியை காதலிப்பதாக அந்த நிகழ்ச்சியிலேயே கூறினார். பிறகு வெளியில் வந்ததும் பல இடங்களில் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்தார்கள். இந்நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார்கள் அமீர் பல விதங்களில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஆடி கார் ஒன்றை வாங்கி இருந்தார்கள் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அடுத்தது என்ன திருமணம் தான் என கூறி வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலைகள் மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். அதாவது இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார்கள் இவர்கள் நடித்துள்ள இந்த ஆல்பம் சாங் நேற்று மாலை யூடியூப் சேனலில் வெளியானது. பாவனியை பார்த்தவுடன் அமீர் காதலில் விழுகிறார் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் மிகவும் அழகான இவர்களுடைய ரொமாண்டிக் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலின் இறுதியில் இந்து, முஸ்லிம் முறைப்படி இவர்களுடைய திருமணம் முடிகிறது இவ்வாறு இவர்கள் மிகவும் யோசித்து அழகாக எடுத்துள்ள இந்த சீன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்படுகிறது மேலும் தற்பொழுது வரையிலும் மில்லியன் கணக்கில் ஆலோசர்களை பெற்றுள்ளது இந்த பாடல்.