விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 யில் ராஜு ஜெயமோகன் முதல் இடத்தை பிடித்திருந்தார் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா, பாவனி, அமீர் போன்றோர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த சீசனை மக்கள் பலரும் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு எண்டர்டெயின்மென்ட், காதல், சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்திருந்தது.
இந்த சீசனின் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து ட்ரெண்டிங்காக காணப்பட்டவர்கள் அமீர் மற்றும் பாவணி. நடிகை பாவனி சின்னத்திரை சீரியல் நடிகை இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்திய பிரபலம் அடைந்தவர்.
இந்த பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் பாவணி தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம் குறித்து பேசியுள்ளார். பாவனிக்கு பிரதீப் என்பவருடன் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி கூறிய போது மக்கள் மற்றும் போட்டியாளர்கள் என பலரையும் கண்கலங்க வைத்தது.
பின்பு இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அமீர் பாவனிடம் காதலை தெரிவித்தார் ஆனால் பாவனி அதனை மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். மேலும் சில பொது இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக சென்று ஊர் சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் இன்று அமீரின் பிறந்த நாளை எடுத்து பாவனி அவரது சமூக வலைதள பக்கங்களில் அமீருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி மட்டும் லவ் யூ டா அமீர் எனவும் பதிவிட்டுள்ளார் . இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவி வருகின்றன.