சின்னத்திரையில் சீசன் சீசனாக மக்களின் மனம் கவர்ந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கிடையே பலவிதமான பாச உணர்வுகள் ஏற்படும் அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் சில போட்டியாளர்களுக்கிடையே காதல் மலரும் அதற்கு முக்கிய காரணம்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வெளி உலக தொடர்பு ஏதும் இல்லாமல் இருப்பதால் ஒரு விதமான காதல் உணர்வு ஏற்படும் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து விட்டால் அவர்கள் பேசிக் கொள்ளக்கூட மாட்டார்கள்.
அந்த அளவிற்கு வெளி உலகத்தில் வந்தால் தனது மனது முழுமையாக மாறிவிடும். இப்படி ஒவ்வொரு சீசனிலும் சில காதல் ஜோடிகள் இருந்தனர் அப்படி கடைசியாக நிறைவு பெற்ற பிக் பாஸ் 5 சீசனில் அமீர் பாவனியிடம் காதலை தெரிவித்து இருந்தார். பாவனி அதனை மறுத்து இருந்தாலும் அமீரிடம் நெருங்கி பேசி கொண்டுதான் இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் 5 முடிவு பெற்று தற்போது வரையிலும் அமீர் மற்றும் பாவனி இருவரும் நெருங்கி பழகி ஊர் சுற்றியும் வருகின்றனர். விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நடனமாடி சிறப்பித்து வருகின்றனர் இந்த நிலையில் அவ்வப்போது அவர்கள் இருவரும் தனியாக சில இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் பாண்டிச்சேரி சென்றுள்ளனர் அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் சாப்பிடும்போது மாறி மாறி கொஞ்சி ஊட்டி கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலை பக்கங்களில் வெளியாகி உள்ளது இதனை அமீர் மற்றும் பாவனி ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.