சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென நல்ல மார்க்கெட் இருந்தாலும் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான அஜித் மற்றும் மாதவன் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
இவ்வாறு ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான இவர் 13 வருடங்கள் கழித்து நடிப்பதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை பாவனா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த இவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட பொழுதிலும் சில தவறான பழக்கங்களால் தனது மொத்த கெரியரையும் இழந்தார்.
எனவே அடையாளம் தெரியாத அளவிற்கு வாழ்ந்து வந்த இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் தீபாவளி, அஜித்குமார் உடன் ஏகன், மாதவனுடன் வாழ்த்துக்கள் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பொழுது மலையாள சினிமா முன்னணி நடிகரான திலீப் மூலம் இவருக்கு நிறைய பிரச்சனைகள் வந்தது.
ஒரு கட்டத்தில் திலீப் கூலிப்படையை வைத்து பாவனாவை அசிங்கப்படுத்தினார் எனவே இதனால் வழக்கு வரை சென்ற நிலையில் கேரள உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்த நேரத்தில் மஞ்சு வாரியாரும் தனது காதல் கணவர் திலீப்பை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்கு பிறகு பாவனா சினிமாவை விட்டு விலகிய நிலையில் திருமணம் செய்துக் கொண்டு கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். தற்பொழுது 13 வருடங்களுக்குப் பிறகு தி டோர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்க்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனால் மீண்டும் ஏராளமான சர்ச்சைகள் எழ இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.