பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாவம் கணேசன் சீரியல் நடிகை.! நான் இப்படித்தான் இருப்பேன் என அவரே கூறியுள்ள தகவல் இதோ..

bhavum ganesan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் பிரபலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இப்படித் தான் இருப்பேன் என அவர் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாவம் கணேசன்.

இந்த சீரியல் கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நவீன், குணவதி கதாபாத்திரத்தில் நடிகை நேஹா கவுடா அவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் குணவதி கணேசன் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நேஹா.

இவர் பெங்களூர் சேர்ந்தவர் மேலும் இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் பார்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 2013ஆம் ஆண்டு கன்னட சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமான ஆகியுள்ளார் நேஹா. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

neha
neha

இதனை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் இவருக்கு பாவம் கணேசன் சீரியலின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய ரீச்சினை பெற்று வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கன்னட சீசன் ஒன்பதாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளார் நேஹா. இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு நேஹா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டுக்குள் சேகரிக்க போகிறேன். திறுச்சி பேசும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது நெகடிவ்வான விஷயமாகவோ, தேவையில்லாத ஒன்றை யாரிடமும் பேச மாட்டேன் என கூறியுள்ளார் இதற்காக ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி உள்ளார்கள்.