நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும்.. கதறும் பவா செல்லதுரை.! எதற்காக தெரியுமா?

bava chelladurai

Bigg Boss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பவா செல்லதுரை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் அதற்கான காரணம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

மற்ற சீசன்களை விட 7வது சீசன் பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது முதல் வாரமே அனல் பறக்கும் சண்டைகளும், சர்ச்சைகளும் இருந்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா ராவ் வெளியேறியுள்ளார்.

இதுவரையிலும் முதல் வாரம் எந்த சீசனிலும் எலிமினேஷன் நடைபெற்றது கிடையாது ஆனால் இந்த சீசனில் எலிமினேஷன் நடைபெற்று உள்ளது. அப்படி முதல் வாரம் பவா செல்லதுரை தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது ஆனால் மக்களின் தீர்ப்புப்படி அனன்யா எலிமினேட் ஆனார்.

bigg boss season 7
bigg boss season 7

இந்நிலையில் தற்பொழுது திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பவா செல்லதுரை வெளியேறியுள்ளார். அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு பவா செல்லத்துரை வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வயதானவர்கள் தான் முதலில் எலிமினேட் ஆவது வழக்கம்.

ஆனால் பவா செல்லதுரை சொல்லிய சில கதைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் டஃப்பான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பவா முதல் ஆளாக வெளியேறி இருந்தால் அனன்யா எலிமினேட் ஆகியிருக்க தேவையில்லை எனவே மீண்டும் அனன்யா வரலாம் என கூறுகின்றனர்.