விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் டாப் 5 இடங்களை பிடித்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாச உறவினையும், கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்பொழுது இந்த குடும்பத்தில் ஜீவா மட்டும் பிரிந்து தனது மாமனார் வீட்டில் வாழ்ந்து வருகிறார் மேலும் இவர்கள் எப்படி ஒன்றினைவார்கள் என்பதையும் தனம் தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் தனது கடமைகளை செய்து வரும் நிலையில் இது எப்படி அனைவருக்கும் தெரியவரும் என்பதையும் மையமாக வைத்து கதைகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் இதற்கிடையில் கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயத்தில் மாட்டிக்கொண்ட நிலையில் இவர் எப்படி வெளியில் வர போகிறார் என்பதை வைத்து இந்த வாரம் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு அடுத்தடுத்து ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பிரபலம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாரதி கண்ணம்மா முதல் சீசனில் டாக்டராக நடித்து வந்தவர் தான் நடிகர் அருண் தற்பொழுது தனத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை செய்யும் மருத்துவராக நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது மேலும் இது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணன் ஏற்கனவே லஞ்சம் வாங்கியது மேல் அதிகாரிக்கு தெரிய வந்த நிலையில் எப்படியாவது கண்ணனை பழி வாங்க வேண்டும் என்பதற்காக கண்ணன் இடத்தில் கத்த கத்தையாக பணத்தை வைத்து விட்டு பிறகு மேல் அதிகாரியை போன் பண்ணி வர வைக்கிறார் இதன் மூலம் கண்ணன் லஞ்சம் வாங்கியதாக கூறி அரெஸ்ட் செய்கிறார்கள்.