பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து விரைவில் முடியும் ரசிகர்களின் ஃபேவரட் சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்..

bharathi-kannama
bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி விளங்கிவரும் நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இரண்டு சீரியல்கள் தொடர்ந்து அடுத்தடுத்து நிறைவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது பிறகு போகப்போக ஒரே கதையை மையமாக வைத்து உருட்டி வந்ததால் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என ரசிகர்கள் காத்து வந்தார்கள்.

அதேபோல் கிளைமாக்ஸ் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டது எனவே இன்னும் சில நாட்களில் முடியும் என ரசிகர்கள் நினைத்த நிலையில் அதற்கு மாறாக பல மாதங்களாக இந்த சீரியலை உருட்டி வருகின்றனர். இந்நிலையில் திடீரென பாரதிக்கு அனைத்து நினைவுகளும் மறந்த நிலையில் தற்போது தான் கண்ணம்மா தன்னுடைய முயற்சியினால் பழைய நிலைமைக்கு பாரதியை கொண்டு வந்துள்ளார்.

பாரதிக்கும் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் ஃபாரின் கிளம்புவதற்காக முடிவெடுத்துள்ளான். எனவே வரும் வாரமாவது இந்த சீரியல் முடியும் என காத்து வருவதோடு மட்டுமல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை கழுவி ஊற்றி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் உடன் மற்றொரு சீரியலும் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2 இந்த சீரியல் தான் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது சமீப காலங்களாக இந்த சீரியலில் அதிரடியான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று என்டர்டைன் சீரியலாக இருந்து வருகிறது இந்த சீரியலும் விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.