தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத்.! இதோ நீங்களே பாருங்கள்.

arun-

விஜய் டிவியில் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் 800 எபிசோடுகளை கடந்து இன்றும் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. இதனை இயக்குனர் பிரவீன் பென்னெட் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஹீரோவாக நடிகர் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஆரம்பத்தில் நடித்து சீரியலை தொடர்ந்து டாப்பில் வைத்திருந்தனர்.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தார் மேலும் இந்த சீரியல் முக்கிய இடத்தை பிடிக்க ரோஷினியின் நடிப்பு முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து அடுத்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்ற பிரபலம் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியலில் வினுஷா தேவி தனது முழு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் பாரதிகண்ணம்மா தொடர் சற்று சறுகளை சந்தித்து தான் வருகிறது. இப்போது கதையில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஹீரோ பாரதிக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்தது எனவும் பல பேச்சுகள் அடிபட்டன. ஆம் நடிகர் அருண் பிரசாத் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறப்படுகின்றன.

ஆனால் இது குறித்து எந்த புகைப்படமும் வெளிவராததை எடுத்து தற்போது நடிகர் அருண் பிரசாத் தனது காதலி அர்ச்சனா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவி வருகின்றன. இவர்களுடன் இணைந்து இந்த புகைப்படத்தில் சீரியல் நடிகை ரித்திகாவும் இருந்து உள்ளார்.

arun-
arun-