பாரதி கண்ணம்மா சீசன் 2ல் ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய டுவிஸ்ட்.! அப்ப டிஆர்பி-யில் அடித்து நொறுக்குவார்களே..

bharathi-kannama-02
bharathi-kannama-02

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான சுவாரசியமான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் டிஆர்பியின் உச்சத்தில் சமீப காலங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்ந்து வருகிறது. இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது தான் நிறைவு பெற்றுள்ளது.

கிளைமாக்ஸ் காட்சிகள் கண்ணம்மா காலத்தில் பாரதி தாலி கட்டுவார் என்ற நோக்கத்துடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த கிளைமாக்ஸ் காட்சிகள் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி, பிக்பாஸ் பிரபலம் ஷிவின், பாடகர் சினேகன் மற்றும் அவருடைய மனைவி கன்னிகா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது பாரதி கண்ணம்மா 2 சீசன் தொடர இருக்கும் நிலையில் பழைய பாரதிக்கு பதிலாக ரோஜா சீரியலின் மூலம் பிரபலமான சிபு சூரியன் நடிக்க இருக்கிறார் மேலும் கண்ணம்மாவாக வினுஷா தேவி மீண்டும் இந்த சீரியலில் நடிப்பை தொடர்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று முதல் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பாகம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் கடந்த புரோமோவில் நாயகன் பாரதி பெரிய பணக்கார வீட்டு பிள்ளை ஆனால் இவருடைய தந்தை சிறுவயதில் இறந்துவிட்டார் இப்படி இருக்க பாரதியின் 25வது பிறந்தநாளை கொண்டாட ஊரில் உள்ள பெரியவர்கள் இவரை காண வீட்டிற்கு வருகின்றனர்.

இந்த நேரத்தில் பாரதி காலையிலேயே குடிபோதையில் ஊர் மக்களை காண வருகிறார் இவ்வாறு ஏற்கனவே பாரதியின் தந்தை இறந்த நிலையில் இவரும் இப்படி குடிப்பது மக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு நாயகன் இருக்க மறுபுறம் கதாநாயகி மத்திய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வருகிறார்.

bharathi kannama 2
bharathi kannama 2

ஆனால் இந்த சீரியலில் இவருடைய பெயர் கண்ணம்மா கிடையாது சித்ரா இவர் சிறையில் கஞ்சா விற்ற ஒருவரை காட்டிக் கொடுத்ததன் மூலம் நல்ல குணத்திற்காக வெளியில் அனுப்பி வைக்கின்றனர். எனவே மாட்டிக்கொண்ட அந்தப் பெண் சித்ராவை கொலை செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறார் மத்திய சிறையில் இருந்து வெளிவந்ததும் சித்ரா ஒரு பேருந்தில் ஏறுகிறார் அங்கு தான் ஒரு பெரிய டுரிஸ்ட் சித்ரா வந்து அமர்ந்த இடத்தில் கண்ணம்மா பக்கத்து சீட்டில் அமர்கிறார். இவ்வாறு பாரதி கண்ணம்மா சீரியல் 2வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது.