வெளியானது பாரதி கண்ணம்மா கிளைமேக்ஸ் வீடியோ.! குஷியில் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் சில வருடங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது.

பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய இடத்தில் நடித்திருந்தார்கள் பின் திடீரென பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி விலக வினுஷா  ரோஷினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் இப்படி ஒவ்வொருத்தராக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதால் டி ஆர் பி இல்  பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதனால் சருக்கலை சந்தித்தது.

இப்படி அடிக்கடி கதாபாத்திரத்தை மாற்றியதால் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களே இந்த சீரியலை முடித்து விடுங்கள் என புலம்பும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள் ஆனால் இயக்குனர் கதையை எப்படியாவது கடத்த வேண்டும் என்பதற்காக எதை எதையோ உள்ள புகுத்தி கொஞ்ச நாள் ஓட்டி வந்தார்.. தற்பொழுது எல்லை மீறி உள்ளது அதனால் இதற்கு மேல் ரசிகர்கள் வெறுத்து விடுவார்கள் என சீரியலை முடிக்க முடிவெடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரியவர இறுதி கட்டத்தை பாரதி கண்ணம்மா சீரியல் நெருங்கிவிட்டது சமீபத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது அப்பொழுது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் முதலில் நடித்த ரோஷ்ணி ஹரிப்ரியன் கிளைமேக்ஸ் காட்சியில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது அவர் ஒரு வித்தியாசமான காட்சியில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் அவர் சில நிமிடங்கள் வந்தாலும் அது மாறுபட்ட காட்சியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ கிளைமேக்ஸ் காட்சி வீடியோ 

Leave a Comment

Exit mobile version