வெள்ளித்திரை எப்படி ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ அதே போல சின்னத்திரை இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்கின்றது. அவர்களும் ஆர்வத்துடன் சீரியல்களை பார்க்கின்றனர். அந்த வகையில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது இதில் பாப்புலரான டிவிகள் என்றால் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி போன்றவைகள் தான்.
அதிலேயும் விஜய் டிவி பல முக்கியமான சீரியல்களை கொடுத்து இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு உள்ளது அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா தொடர் முதல் தொடர் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து பாரதி கண்ணம்மா இரண்டாவது தொடர் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் வினுஷா தேவி, சிப்பு சூரியன், ரூபா ஸ்ரீ, தீபா ஷங்கர், ரேஷ்மா பிரசாந்த், ராதிகா என பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பிரசாந்த் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்ன தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது அது சொன்னது என்னவென்றால்.. சின்னத்திரையை பொருத்தவரை சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாலும்..
அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நடைபெற்று வருவதாகவும் பல பேர் தன்னிடம் இது போன்று கேட்டிருப்பதாகவும் தான் அவர்களுக்கு செவி சாய்க்காமல் நடிப்பை வேண்டாம் என்று சென்று விட்டதாகவும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை இருந்தால் தான் ஆடிஷன் போன்றதை நிறுத்திக் கொண்டேன் என தெரிவித்தார்.
இந்த தகவல் தற்பொழுது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. வெள்ளித்திரையில் தான் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் அதிகம் என்று பார்த்தால் சின்னத்திரைையிலும் இதுபோன்று இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது இப்படி இருந்தால் எப்படி மீடியா உலகம் வளரும், எப்படி புதுமுக நடிகர் நடிகைகள் நடிக்க வருவார்கள் எனக் கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.