climax காட்சியில் பட்டையை கிளப்ப போகும் பாரதி கண்ணம்மா.! இப்படி ஒரு ட்விஸ்டை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.!

barathi-kannama
barathi-kannama

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது  அதனால் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி எப்படி இருக்கும் என காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்  இந்த நிலையில் தற்போது அது பற்றி அப்டேட் கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீரியலில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று ஆனால் இந்த சீரியலில் அடுத்தடுத்த முக்கிய நடிகர்கள் திடீரென இந்த சீரியலை விட்டு விலகினார்கள் இதனால் இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் குறைய தொடங்கியது இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக வினுஷா ஒப்பந்தமானார். அப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கு தற்போது எண்டு கார்டு போட உள்ளது விஜய் டிவி.

பாரதிகண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டி விட்டது ஆனாலும்  ரசிகர்கள் புலம்பித் தள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த டி என் ஏ டெஸ்டிங் முடிவு என்னதான் ஆச்சு  என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் இருந்தது அந்த வகையில் விரைவில் அந்த டி என் ஏ  ரிசல்ட் வெளியாக இருக்கிறது இத்துடன் இந்த தொடர் முடிவடையவும் இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சியில் இந்த சீரியலுக்கு தூணாக இருந்த பழைய கண்ணமாவாக நடித்த ரோஷினி மிகவும் வித்தியாசமான ரோலில் மீண்டும் தோன்ற  இருக்கிறார் சில நிமிடங்கள் அவர் திரையில் தோன்றினாலும் அந்த காட்சிகள் அனைத்தும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் ரோஷினி இந்த சீரியலில் வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.