பாரதிராஜா என்னை தூரமாக வச்சே பார்ப்பார் – மேடையில் உண்மையை உடைத்த ரஜினி.!

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். மேலும் சினிமா உலகில் பல நடிகர்களையும் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் பார்த்தவர் ரஜினி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ரஜினி சினிமா உலகில் பலருடன் பழகி இருந்தாலும் அவரது நட்பு  வட்டாரம் வெகு சிலரிடமே இருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாரதிராஜா குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்திய மேடை ஒன்றில் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நான் ரொம்ப வருஷம் முன்னாடி வரைக்கும் அவரை பாரதிராஜா பாரதிராஜா தான் கூப்பிட்டு இருந்தேன் அப்புறம் இளையராஜா ஒரு தடவை கூப்பிட்டு அவர் வயசு சொன்னாரு அவருடைய உண்மையான வயச சொன்னா கையெடுத்து கும்பிட்டு கால்ல விழுவீங்க ஆனாலும் எப்படி இவ்வளவு இளமையா வெளியே திரிராருன்னா ரெண்டு காரணம்..

ஒன்னு அவர் பிறந்த வளர்ந்த இடம் எல்லாம் இந்த மதுரை மண்ணுல.. அவங்க அம்மா கையாள அந்த சத்தான சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறார் இரண்டாவது அவர் இருக்கிறது அவள சினிமாவுல தான் கிரியேட்டிவிட்டியா இளமையா  வச்சிக்க அவரும் இளமையாய் இருந்துகிட்டே இருக்கார் என்றார் பிடிச்ச வேலையை செய்கிறார் அவரது சினிமா வாழ்க்கை பற்றி அவர் நாம் எப்பொழுதுமே இளமையாய் இருக்க..

இளமை காலத்துல பயங்கரமாக உழைக்கணும் முதுமை காலத்தில பிஸியா இருக்கணும் அதை இரண்டையும் அவர் செய்தார் அவருக்கு பிடிச்ச சினிமா தொழில்ல பிடிச்சு செஞ்சுக்கிட்டே இருக்கார். அதனாலதான் அவர் அவ்வளவு பெரிய கலைஞன் என்று கூறினார். பாரதிராஜாவும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள் எம்ஜிஆர் ரொம்ப டென்ஷனா இருந்தா பாரதிராஜா சாரை கூப்பிட்டு தான் பேசுவார் அதுவும் மணி கணக்கா பேசுவார் ரெண்டு பேரும் கொஞ்சு குலாவுவார்கள் என்னைய எந்த ஹீரோயினையும் லவ் பண்ணலையான்னு கேட்பார் எம்ஜிஆர் அந்த அளவுக்கு ஓப்பனாக பேசக்கூடிய ஆட்கள்.

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது பாரதிராஜா சார் கிட்ட ரஜினி பத்தி உங்கள் கருத்து என்ன என கேட்டா ரஜினி சார் நல்ல மனிதர் என்று சொல்லுவார். ஒரு கலைஞரா எப்படி பாக்குறீங்கன்னு கேட்டா நல்ல மனிதர் என்பார் அப்படி என்னை ஒரு நல்ல நடிகராக அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை.. எப்பொழுதுமே அவர் பார்க்கிற பார்வையிலேயே எனக்கு ஒரு விஷயம் புரியும் நானும் தான் ஹீரோவாக நடித்தேன் என்னை ஏத்துக்கவே இல்லை உன்னை எப்படி டா ஏத்துக்கிட்டாங்க என்கின்ற மாதிரியே பார்ப்பார் என அவர் கூறி முடித்தார்.