ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த மனோபாலா பிள்ளை நிலா, ஊர் காவலன் போன்ற ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் மேலும் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பாக இயக்குவதை விட்டுவிட்டு காமெடி கதாபாத்திரங்களிலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவரது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனோபாலா கூறியுள்ளாராம் அதில் நான் தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் என்னை கமல்ஹாசன் தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரும்படி கூறியிருந்தார் அதற்காக ஒரு நாள் கார் அனுப்பி பாரதிராஜாவை பார்க்க சொன்னார்.
மேலும் இது குறித்து மனோபாலா உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்க காரில் சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று கூறி நகைச்சுவையாக அந்த பேட்டியில் பேசியது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து இன்னொரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார்.
அதாவது மனோபாலாவிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது பாரதிராஜாவை பார்க்க சென்ற பொழுது காரில் இருந்து இறங்கி வரும் பொழுது சிகரெட் பிடித்துக்கொண்டே என்னை பாரதிராஜாவிடம் சென்று ஆர் யூ பாரதிராஜா கமல்ஹாசன் உங்களிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்ள அனுப்பி இருக்கிறார்.
என கூறியுள்ளாராம் ஆனால் அந்த இடத்தில் கமல்ஹாசன் பெயரை சொல்லவில்லை என்றால் எனக்கு பலத்த அடி விழுந்திருக்கும் என்றும் மனோபாலா கூறியதாக இது தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் மனோபாலாவிற்கு அப்போவே அப்படி ஒரு கெட்ட பழக்கம் இருந்துள்ளதா என்று கேட்டு வருகிறார்கள்.