இந்த ஒரே காரணத்தினால் பாக்யராஜை அடித்து துரத்திய பாரதிராஜா..! கடைசியில் இப்படி ஆயிடுச்சே..!

bakkiyaraj-1

தமிழ்சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் இன்றும் இவருடைய பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் ஏனெனில் அந்த அளவிற்கு திரைப்படங்கள் மூலமாக இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் என்று கூட சொல்லலாம்.

அந்த காலத்தில் பெரிய இயக்குனர்களில் இயக்குனர் பாரதிராஜாவும் ஒருவர்  இதனைத் தொடர்ந்து அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு பல்வேறு இயக்குனர்களும் போட்டி போட்ட நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் பாக்கியராஜ்.

இவரும் பாரதிராஜா போலவே தமிழ் சினிமாவில் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இவ்வாறு பிரபலமான நமது பாக்யராஜ் பாரதிராஜா திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தயாரிப்பு கம்பெனியை தொடங்க இருந்துள்ளார்.

அப்பொழுது ஒரு திரைப்படம் பற்றிய பேச்சுவார்த்தையின் போது  பாரதிராஜாவுக்கும் பாக்யராஜ் இருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பொழுது  பாரதிராஜாவை பாக்கியராஜ் வாய்க்கு வந்ததெல்லாம் பேசியதன் காரணமாக  பாரதிராஜா கடும் கோபத்தில் இருந்தது மட்டுமில்லாமல் அவரை கண்டபடி திட்டி துரத்தி விட்டாராம்

இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா அவர்கள் பாரதிராஜாவை பார்க்க வந்த பொழுது பாக்கியராஜ் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது நடந்ததை கூறிய பாரதிராஜா மனோபாலா உடனே புத்திசாலியை கூட வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம் என கூரியிருந்தார்.

இதனை தொடர்ந்து பாரதிராஜா பாக்யராஜ் இடம் சமாதானம் பேசி மறுபடியும் அழைத்து வந்து விட்டாராம். இதனை இயக்குனர் மனோபாலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.