கமல் படத்தில் தன்னை நடிக்க கூடாது என பாரதிராஜா கூறியதாக நடிகர் தியாகு தெரிவித்துள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்க கமலஹாசன் அவர்கள் தனது சிறு வயதிலிருந்து நடித்து வருகிறார். அப்படி தற்பொழுது வரையிலும் 230 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நிலையில் இதற்கு இடையில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் இறங்கி இருக்கிறார்.
ஆனால் இந்த கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத காரணத்தினால் இதனை அடுத்து சோர்வடைந்த கமல் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் இந்த படத்தில் கமல் அவர்கள் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை முடித்துவிட்டு தெலுங்கில் ப்ராஜெக்ட் கே தமிழில், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த வாய்ப்புகளை கைவசம் வைத்திருக்கிறார். சினிமாவில் எந்த பிரச்சனை வந்தாலும் கமலஹாசன் முதல் ஆளாக நிற்கக்கூடிய ஒருவர் அப்படி ஒரு முறை திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்ட பொழுது தொழிலாளர் சங்கத்தின் பக்கம் கமலஹாசன் நின்றார்.
இந்நிலையில் காதலா காதலா படத்தின் பொழுது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தியாகு சமீப பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். காதலா காதலா படத்தில் டெல்லி கணேஷ் நடிக்க வேண்டிய வேடம் முதலில் தனக்கு தான் வந்தது கமலுடன் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன் படப்பிடிப்பிற்காக தயாரிப்பாளர் தேனப்பன் எனக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டார்.
அடுத்த நாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு ஆனால் இயக்குனர் செல்வமணியும், பாரதிராஜாவும் என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்க கூடாது என சொல்லிவிட்டனர். எப்பேர்பட்ட நடிகர் இதனை அவரிடம் நேரில் சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என அவர்களிடம் சொன்னேன் ஆனால் பாரதிராஜா நீ அங்கே போகவே வேண்டாம் என சொன்னார். ஆனால் நான் அதையும் மீறி அங்கு சென்று கமலிடம் இதனை சொன்னேன் உடனே பேக்கப் என சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அதன் பிறகு எனக்கு பதில் டெல்லி கணேஷ் நடித்தார் என தெரிவித்துள்ளார்.