80,90 காலக்கட்டத்தில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருந்தவர்தான் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றினை கண்டு வந்ததால் இவருடைய ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்கும் ஏராளமான நடிகர் இருந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் சமீபத்தில் நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு அவர்தான் காரணம் என நடிகை குஷ்பூவை இயக்குனர் பாரதிராஜா கண்டித்து திட்டிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான 16 வயதிலேயே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவ்வாறு இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கேப்டன் மகள் கிட்ட ஏராளமான திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வெற்றினை கண்டார். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் படங்களை இயக்கி வந்த நிலையில் சமீப காலங்களாக வயதான காரணத்தினால் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ராஜா குஷ்பு நடிப்பில் வெளியான கேப்டன் மகள் படத்தில் நடந்த சுவாரசியமான தகவலை நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார். அதாவது 1993ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற திரைப்படம் வெளியானது இந்த படத்தினை பாரதிராஜா இயக்கியிருந்த நிலையில் இவருக்கு பாம்பு என்றால் மிகவும் பயம் கேப்டன் மகள் படத்தின் படப்பிடிப்பின் பொழுது நடிகை குஷ்பூ பல் பிடுங்கிய பாம்பை கையில் வைத்துக்கொண்டு பாரதிராஜாவிடம் சென்று பேசிவுள்ளார்.
அப்பொழுது திடீரென பாம்பை எடுத்தவுடன் பயந்துபோன பாரதிராஜா தலை தெரிக்க ஓடினாராம் எனவே படப்பிடிப்பில் பதட்டம் ஏற்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பு அடங்கியதாகவும் அதனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பாரதிராஜா நான் ஹாட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு இவள் தான் காரணம் என குஷ்புவை சொல்லி திட்டினாராம் இதனை நடிகை குஷ்பூ சமீப பேட்டியில் கூறியுள்ளார்.