500 ரூபாயை பிடித்துக் கொண்ட பாரதிராஜா.. 46 வருடங்களாக மேடையில் சொல்லி அசிங்கப்படுத்தும் ரஜினி.! இந்த காசுக்கு இவ்வளவு அக்கப்போரு..

rajini
rajini

Rajini : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழும் பல நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் பல வெற்றி படங்களை இயக்கிய  தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக நடிப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இப்படிப்பட்ட பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இவர் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 16 வயதினிலே இந்த படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தான் பற்றி பேசி உள்ளார் 16 வயதினிலே படத்தை  முதலில் பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுக்க முடிவு செய்தோம் ஹீரோ ஹீரோயின்னாக நாகேஷம் ரோஜா ரமணியையும் நடிக்க வைக்க திட்டம் போட்டோம்

ஆனால் கடைசியாக படத்தை கலராக எடுத்துவிடலாம் என முடிவு செய்யப்பட்டது. அதனால் ஹீரோ, ஹீரோக்கள் மாற்றம் செய்யப்பட்டது.  ஹீரோவாக கமலை நடிக்க அணுகினோம் படத்தை வெறும் 28 நாட்களில் எடுத்து முடித்தேன் படத்தில் மொத்த பட்ஜெட்டில் ஆறே முக்கால் லட்சம் தான்..

படத்தில் பரட்டை கதாபாத்திரத்தில் மலையாள வில்லன் நடிகர் ஒருவரை போடலாம் என திட்டம் போட்டு இருந்தோம் இந்த சமயத்தில் தான் ரஜினி ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்தார். வண்டியின் பின்னாடியே அவர் உட்கார்ந்திருந்தார் அவரின் முடி எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால் நடிக்கிறீர்களா என்று கேட்டேன்.

நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை கொடுக்க முடியாது என கூறினேன் ரஜினி 5000 சம்பளம் கேட்டார் நான் யோசித்தேன் பிறகு 3000 கொடுங்கள் என்றார். அப்பொழுது நான் ஒரு 500 ரூபாய் பாக்கி வைத்து விட்டேன் அதை இன்று வரையிலும் பல மேடைகளில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி வருகிறார் என பாரதிராஜா கூறியுள்ளார்.