இதுவரை இல்லாத அளவிற்கு 39 வது வார TRP ரேட்டிங்கில் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி அசத்திய “பாரதிகண்ணம்மா” – கொண்டாடும் ரசிகர்கள்.

bharathikanamma

விஜய் டிவி தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் வகிப்பது பாரதி கண்ணம்மா தொடர். இந்த சீரியல் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான சீரியல்களானா சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீசன் 1 & 2 என அனைத்து சீரியல்கலுமே மக்களின் ஃபேவரட் சீரியல்கள் தான்.

அந்த வகையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது பாரதிகண்ணம்மா தொடர்தான் இது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் ஓடிக்கொண்டு வருகிறது. சொந்தமாக இருக்கும் இரட்டை குழந்தை பிறந்த செய்தி தற்போது தான் கண்ணம்மா தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தையை வெண்பா கடத்தி வைத்துள்ளதாக கண்ணம்மா விடம் கூறியிருந்தார்.

அதனால் கண்ணம்மாவும் பாரதியை தேடிச்சென்று எட்டு ஆண்டுகளாக நம்ப இன்னொரு மகளை காணவில்லை என கூறினார். பாரதி அதனை நம்பவில்லை உனக்கு ஒரு குழந்தையை தானே எனக் கேட்டார் கண்ணம்மா இல்லை எனக்கு நன்றாக தெரியும் எனக்கு இன்னொரு குழந்தை இருக்கு அந்த குழந்தையை வெண்பா கடத்தி வைத்து மிரட்டி கொண்டு இருக்கிறாள் என பாரதியிடம் கூறினார்.

பாரதி உடனே கோபமாகி உனக்கு பிரசவம் பார்த்ததே நான்தான் என்னிடமே வந்து உனக்கு இரண்டு குழந்தை என்று பொய் சொல்கிறாயா உனக்கு கண்டிப்பாக ஒரு குழந்தை தான் என கூறினார். பாரதிகண்ணம்மாவை அவமானப்படுத்தியப்படி பேசினார் உடனே கோபட்ட கண்ணம்மா உன் முன்னால் எப்படி வாழ்ந்து காட்டுகிறேன் என்று பார் என சவால் விட்டுச் சென்றார்.

இந்த நிலையில் வெண்பா பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்க திட்டமிடுகிறாள் அவர் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையை என்னிடம் உள்ளது பாரதியை விவாகரத்து செய்தால் தான் அந்த குழந்தையை கொடுப்பேன் என மிரட்டுகிறார். கண்ணம்மா என்ன செய்வது என்று தெரியாமல் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்.

அந்த எபிசோடுகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி பல திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா தொடர் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 39-வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கடந்த சனிக்கிழமை எபிசோட் 11.3, திங்கள் எபிசோட் 11.3, செவ்வாய் எபிசோட் 11. 9,  புதன்கிழமை எபிசோடு 11.9, வியாழக்கிழமை எபிசோட் 11.4, வெள்ளிக்கிழமை எபிசோடு 12.8, புள்ளைகளை பிடித்து முன்னிலையில் இருக்கிறது.

bharathi kanamma trb 666
bharathi kanamma trb 666