சீரியலை தொடர்ந்து சினிமாவிலும் கலக்கப் போகும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்.!யாருன்னு தெரியுமா.?

பாரதி கண்ணமா என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது ஏனென்றால் அந்த அளவிற்கு விஜய் டிவியில் பிரபலமான ஒரு சீரியல் ஆகும்.
இக்கதை கணவனின் சந்தேகத்தாலும்,சில சதி செயல்களாலும் ஒரு பெண் தன் கணவனை பிரிந்து தனித்து வாழ்வது தான்.

இந்த சீரியலில் கதாநாயகனான பாரதி கேரக்டரில் அருண் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக கண்ணமா கேரக்டரில் ரோஸியும் சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளார்கள். இந்த சீரியல் தற்போது TRP- யில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகிறது.

அந்தவகையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக நடிக்கும் அகில் என்னும் “ரிஷி”க்கு சினிமா பட வாய்ப்புகள் வந்துள்ளது.

இந்த சீரியலில் ரிஷி தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதன் காரணமாகவே தான் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் பஹிரா என்னும் திரைபடத்தில் சிறிய வேடத்தில் ரிஷிக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்த சிறிய வாய்ப்பின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்த இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதையடுத்து பல வெள்ளித்திரை நட்சத்திரங்களும், அவரது உறவினர்களும், நண்பர்களும் அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment