திருமணமான நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர்.! அடப்பாவிகளா இது எப்ப நடந்தது.!

bharathi kannama 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்தவகையில் டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நாடகம் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்து வரும் வெங்கடேஷ் திடீர் மாரடைப்பால் சமீபத்தில் காலமானார்.

இவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் ரோஹினி என்ற புதுமுக நடிகை சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.  இவர் கருப்பாக இருந்தாலும் தனது எதார்த்த நடிப்பால்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.

பிறகு இந்த நாடகத்தில் பாரதி இந்த கதாபாத்திரத்தில் அருண், கண்மணி ,அகிலன் என பலர் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் அகிலனும் இந்த சீரியலின் மூலம் பிரபலம் அடைந்துள்ளார்.

அகிலன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இந்த புகைப்படம் திருமண விளம்பரத்தின் போது எடுத்த புகைப்படம் என்றும் அதில் அகிலனும் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

akilan 001
akilan 001