பாரதிகண்ணம்மா அருண் திருமணம் செய்து கொள்ளப் போவது இந்த சீரியல் நடிகை தான்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

arun

விஜய் டிவியில் மிகவும் சுறுசுறுப்பாகவும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் சமீபகாலங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதில் ஒரு சில நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டு இருந்தாலும் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷ்னி மாறியதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.

இவர் முதன் முறையாக பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்று கொடுத்திருந்தார்.இவர் திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகினார் எனவே இவருக்கு பதிலாக வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.  இந்தத் தொடரின் ஆரம்ப கால கட்டத்திலிருந்து கதாநாயகனாக நடித்து வரும் அருண் பிரசாத் கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் என்ற விருதை பெற்றார் இந்த வருடம் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஏன் இந்த வருடம் அருண் இருக்கு இந்த விருது கிடைக்கவில்லை என்று கூறிவந்த நிலையில் இவரைப் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் இந்நிகழ்ச்சியின் மூலம் வைரலாகி வருகிறது. இந்த வருடம் நடந்த அவார்ட் நிகழ்ச்சியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.

arsana
arsana

அப்பொழுது அவரை தொகுப்பாளர்கள் பாரதி,டாக்டர், டிஎன்ஏ போன்ற விஷயங்களை கூறி கிண்டல் செய்து வந்தார்கள் எனவே அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலித்து வருகிறார்களா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளது. பிறகு  அர்ச்சனா மற்றும் அருண்பிரசாத் இருவரும் ஒன்றிணைந்து வீடியோக்களையும் தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்கள்.