தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்,நடிகைகள் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கி விட்டு பிறகு இறுதியில் சின்னத்திரையில் ஏதாவது ஒரு சீரியலில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் பிரபல சீரியலாக தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி உள்ளவர் நடிகை ரூபாஸ்ரீ.
இவர் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பலq மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் முதலில் வில்லியாக அறிமுகமாகி பிறகு அதிரடியாக நல்ல கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவரோ மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாக்களில் டாஸ்மாக் செய்யும் வீடியோக்கள் மற்றும் தனது அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் எப்பொழுதும் புடவை கட்டிய குடும்பப் பெண்ணாகவே நடித்து வருகிறார் ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.