சின்னத்திரையில் டிஆர்பி யில் கெத்து காட்டும் சீரியல்களில் 1 பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை சரவணன் மீனாட்சி, ராஜா ராணி சீரிஸ் போன்ற ஹிட் சீரியல்களை கொடுத்து வரும் பிரவீன் பெண்ணெட் இரண்டு மூன்று வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த பாரதிகண்ணம்மா தொடரில் ஒரே ஒரு கான்செப்டை பல மாதங்களாக எடுத்து வருகின்றனர்.
தற்போது இந்த தொடரில் ஹேமா லட்சுமி இருவரும் சேர்ந்து பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைக்க நினைக்கின்றனர். ஆனால் இவர்களை சேரவிடாமல் வெண்பாவும் பல சதித் திட்டங்களை தீட்டி வருகிறார். மேலும் இந்த தொடரில் தற்போது ஒரு புதிய பிரபலம் ஒருவர் என்ட்ரி ஆகியுள்ளனர்.
அவர் சௌந்தர்யா மற்றும் வேணுகோபாலின் கல்லூரி நண்பன் பல வருடங்கள் கழித்து இவர்களை சந்தித்து தற்போது குடும்பத்தில் ஒருவராக பேசி வருகிறார். மேலும் வெண்பாவிடமும் புதிதாக ஒரு நபர் போன் செய்து பேசி வருகிறார் இப்படி புதுப்புது பிரபலங்கள் தற்போது இத்தொடரில் அறிமுகமாகி வரும் நிலையில்..
மற்றொரு பிரபலமும் இந்த சீரியலில் அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரேகா பாரதிகண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் அவர் பாரதியின் மருத்துவமனைக்கு வந்து அவரிடம் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் பிக்பாஸ் பிரபலமான நிஷா இந்த சீரியலில் புதிதாக களம் இறங்கிய நிலையில் தற்போது இரண்டாவது பிக்பாஸ் பிரபலமான ரேகாவும் இந்த சீரியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.