விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தொடர் தற்போது புதுப்புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது 8 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருக்கும் பாரதி கண்ணம்மா இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கு இடையே இருக்கும் சின்ன சின்ன விவாதங்கள் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வந்த வெண்பா தற்போது நிஜவாழ்க்கையில் குழந்தை பெற்றுள்ளதால் அவரின் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை மாற்றாமல்..
அந்த கதாபாத்திரத்திற்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்காமல் பாரதி கண்ணம்மா இருவரையுமே தொடர்ந்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து இதில் மற்றொரு வில்லனான துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரவீன் ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொலைசெய்ய முயற்சித்தாலும் பின்பு நல்லவனாக மாறி கண்ணம்மா அவருக்கு உதவி செய்து வந்தார்.
மேலும் இவரின் கதாபாத்திரத்தையும் சில மாதங்களாகவே தொடரில் காண்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் வில்லனாக நடித்து வந்த பிரவீனுக்கு நிஜத்தில் திருமணம் நடந்துள்ளது. மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.
இவர் தற்போது ராஜாராணி சீசன் 1 தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வந்தா ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது ரசிகர்கள் அதற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளனர்.