பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் அருண் பிறந்தநாள் கொண்டாட்டம் – ரசிகர்களை கவர்ந்த வீடியோ..!

arun-
arun-

சின்னத்திரை டாப் சீரியல்களில் 1 பாரதி கண்ணம்மா தொடர். இந்த தொடர் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலின் கதையை விறுவிறுப்பாக நாளுக்கு நாள் சுவாரசியம் கூட்ட வேறு பல ஹிட் சீரியல்களை கொடுத்த பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரின் மக்களின் சுவாரசியத்தை குறைக்கும் செயல் என்னவென்றால் இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்பின் காரணமாக பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில்  வேறு பிரபலம் நடித்து வருகின்றனர். அதனையடுத்து இதில் கதாநாயகனுக்கு தம்பியாக நடித்து வந்த அகிலன் வெள்ளித்திரையில் பட வாய்ப்பின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகி வேறு ஒரு பிரபலம் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வந்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் அவருக்காக தற்போது டிக் டாக் பிரபலம் விஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகியது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.

இருந்தாலும் இந்த சீரியல்  டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையிலே உள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகன் அருண் பிரசாத்துக்கு இன்று பிறந்தநாள் மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினிக்கும் இதே நாளில் பிறந்த நாள் எனவே சென்ற வருடம் இவர்கள் பிறந்தநாளை ஒன்றாக இணைந்து பாரதிகண்ணம்மா படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

arun
arun

ஆனால் இந்த வருடம் இவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர்கள். தற்போது அருண் பிரசாத் வேறு மாநிலத்தில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் பிறந்தநாள் இரவு எடுத்த வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.