அஜித், விஜய்க்கே டஃப் கொடுக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி – கோட் சூட்டில் கெத்து காட்டிய அம்மணி.! வைரலாகும் வீடியோ

roshini-
roshini-

மாடலிங் துறையில் இருந்து பின்பு சின்னத்திரையில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும்..

இந்த சீரியலில் இவரது திறமையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து  டி ஆர் பியில் டாப்பில் இருக்க ரோஷினியின் நடிப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. பின்பு ஒரு கட்டத்தில் பாரதிகண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி பாதியிலே வெளியேறினார் அவருக்கு பதில் இப்போது இந்த சீரியலில் வினுஷாதேவி என்பவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி பின்பு படங்களில் கமிட்டாகி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மீண்டும் அவர் சின்ன திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு சமையல் செய்து அசத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றன அந்த வகையில் ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல எதிர்காலம் இருக்கும் என பார்க்கப்படுகிறது. மேலும் ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கோட் சூட் உடையணிந்து செம்ம மாஸாக வீடியோ ஷூட் நடத்தி உள்ள வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் ஆச்சரியம் அடைய மறுபக்கம் லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ