பாரதி கண்ணம்மா சீரியல் தொடரிலிருந்து வெளியேறிய மற்றொரு முக்கிய பிரபலம்.! அவரே வெளிப்படையாக சொன்ன தகவல்.

anjali
anjali

சின்னத்திரை சீரியல்களில் டி ஆர் பி யில் தொடர்ந்து முன்னணியில் வகிக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்போது சில வாரங்களாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களை பிரித்து.

பாரதியை தன்பக்கம் ஈர்ப்பதற்காக வில்லி வெண்பா சாகப் போவது போல் ட்ராமா செய்து பாரதியை நம்ப வைத்துள்ளார். அந்தவகையில் பாரதியும் வெண்பாவை நம்பி பாரதியின் மகள் ஹேமாவுடன் சேர்ந்து வெண்பா வீட்டிற்கு வருவது போல் இனிவரும் எபிசோடில்  காண்பிக்கப்படுகிறது. மேலும் அங்கு பாரதியை தங்கவிடாமல் கண்ணம்மா சில டுவிஸ்டுகள் எல்லாம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஹீரோயினாக முதலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த நிலையில் அவருக்கு வேறு சில வாய்ப்புகளின் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் மேலும் அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ரோஷினிக்கு  பதில் தற்போது வினுஷா தேவி என்ற மாடலிங் பிரபலம் பாரதிகண்ணம்மா சீரியலை தொடர்ந்து டாப் லிஸ்டிலே வைத்து வருகிறார். அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் துணை கதாநாயகியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரன்.

இந்த சீரியலில் இருந்து விலகுவதாக இணையதள பக்கத்தில் ஒரு தகவல் ஒன்று உலா வந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தகவல் உண்மை என உறுதி செய்யும் வகையில் கண்மணி மனோகரன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.