தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்கள் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடித்துவரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமடைந்து உள்ளவர் தான் ரோஷினி இவர் கண்ணம்மா கேரக்டரில் நடித்து இவரின் எதார்த்த நடிப்பினால் சின்னத்திரையில் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்த சீரியலில் கதாநாயகனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கதாநாயகன் அந்த குழந்தை என்னுடையது இல்லை என்று சந்தேகப்பட்டு கதாநாயகியிடம் சண்டை போட்டதும் கதாநாயகி கதாநாயகனை வேண்டாம் என்று கூறி தனியாக வாழ்ந்து வருகிறார்.
அந்தக் கதாநாயகிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் கதாநாயகனின் அம்மாவாக கதாநாயகிக்கும், கதாநாயகனுக்கும் தெரியாமல் ஒரு குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு போய் வளர்த்து வருகிறார். அந்தவகையில் கதாநாயகனின் அம்மாவிடம் ஒரு குழந்தையும் கதாநாயகியிடம் ஒரு குழந்தையும் வளர்ந்து வருகிறது.
தற்பொழுது இவர்களுக்கு எட்டு வயது ஆகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் எப்படி ஒன்றினைவார்கள் ன்பதை வைத்துதான் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் அமைய உள்ளது. அந்த வகையில் சில மாதங்களாக இந்த சீரியல் கிளைமேக்ஸை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
எனவே ரசிகர்கள் எப்பொழுது கிளைமேஸ் என்று பலரிடம் கேட்டு வருகிறார்கள். அந்தவகையில் இந்த சீரியலில் பயங்கர வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வரும் பரீனாவிம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு. அதற்கு பதிலளிக்கும் வகையில் பரினா 2051 என்று கூறியுள்ளார்.