எனக்கு அம்மா இல்ல உனக்கு அப்பா இல்லை.. பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணமா.! கண்ணீருடன் லட்சுமி புதிய ட்விஸ்ட்.!

bharathi-kannamma
bharathi-kannamma

பாரதிகண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது இந்த சீரியலில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என ஹேமா முடிவெடுக்கிறார் ஆனால் இதற்கு லட்சுமி குறுக்கே நிற்பது தான் இன்றைய எபிசோட்.

பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த வாரம் குழந்தைகளை வைத்து கதையை நகர்த்தி வருகிறார்கள் அதனால் பலருக்கும் சலிப்பு தட்டி வருகிறது. அதனால் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி யில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பாதி எபிசோட் ஸ்கூல்லிலேயே முடிந்துவிடுகிறது இதனால் ரசிகர்கள் சீரியலை விரும்பி பார்க்க மாட்டாங்க. இதனை புரிந்து கொண்ட இயக்குனர் சீரியலில் புதிய அதிரடியை  நுழைத்துள்ளார்.

ஹேமாவும் லட்சுமியும் நல்ல தோழிகளாக சுற்றி வருகிறார்கள் ஆனால் இன்றைய எபிசோடில் திடீரென சண்டை போட்டு பிரிந்து விடுகிறார்கள் அதற்கு காரணம் பாரதிக்கும் கன்னமாவுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஹேமா எடுக்கும் முடிவுதான். இதுகுறித்து ஹேமா தன்னுடைய குடும்பத்தாரிடம் சொல்கிறார். லட்சுமியின் அம்மா கண்ணம்மாவுக்கு ஹேமாவின் அப்பா  பாரதிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஹேமா சொல்லுகிறார்.

உடனே சவுந்தர்யா, வேணும், அஞ்சலி, அகிலனுக்கு, இந்த சந்தோஷம் தாங்க முடியவில்லை ஆனால் அதை எதையும் வெளிப்படுத்தாமல் ஹேமாவுக்கு இப்படி ஒரு எண்ணம் வர வேண்டும் என்பதே அவர்களின் ஆசை இதனை ஹேமாவிடம் வெளிக்காட்டாமல் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். லட்சுமி தனது அப்பாவை தேடி கண்டு பிடிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார் அதேபோல் கண்ணம்மா விடம் சபதமும் போடுகிறார்.

லக்ஷ்மி எப்படியாவது தன்னுடைய அப்பாவை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார் இதனால் கண்ணம்மாவுக்கு பயம் அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் ஹேமா லட்சுமியிடம் போய் எனக்கு அம்மா இல்லை உனக்கு அப்பா இல்லை அதனால் பாரதிக்கும் ககண்ணமாவிக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என கூறுகிறார். உடனே இலட்சுமி கோபத்தில் ஹேமாவை அடிக்கவே செல்கிறார்.

உடனே லக்ஷ்மி இனிமேல் நீ எங்க அம்மாவிடம் பேச கூடாது என ஹேமாவுக்கு ஆர்டர் போடுகிறார். அதேபோல் லட்சுமி அப்பாவை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம் அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்து வைக்க மாட்டேன் எனக் கூறிவிட்டு ஆவேசமாக அங்கிருந்து கிளம்புகிறார். ஆனால் ஹேமாவும் எப்படியாவது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்.