விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா, இது தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வரும் நாடங்களில் ஒன்று,என்னதான் இந்த நாடகம் இரு வேளைகளும் ஒளிபரப்பபட்டாலும் இரவு வேளைகளில் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பி பார்க்க படுகிறது.
இந்த நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மக்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும். ஹாஸ்பிடலில் அட்மின் ஆபீசர் ஆக பணியாற்றி வந்த கண்ணம்மா சக்திக்கு எளிதாக இதயம் கிடைப்பதற்கு புத்திசாலித்தனமாக யோசித்து ஒரு வழியைச் சொன்னார் அதன் மூலம் சக்திக்கு இதயம் சரியான நேரத்தில் பொருத்தப்படும் என்று அனைவராலும் நம்பப்பட்டது.
இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவின் சமயோகித புத்தியை நினைத்து பெருமிதம் அடைகிறார். மேலும் இது பாரதியிடம் கண்ணமா மேல் ஒரு நல் எண்ணத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கண்ணம்மா ஹாஸ்பிடலில் நல்ல பெயரை வாங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான பாரதிகண்ணம்மாவின் புரோமோ வீடியோவில் பாரதி சக்திக்கு ஆபரேஷன் செய்து விட்டு வெளியே வருகிறார் வந்ததும் சக்தியின் பெற்றோர்கள் பாரதியை பார்க்க, ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று கூறுகிறார் பாரதி, அதற்கு சக்தியின் பெற்றோர்கள் பாரதியின் காலில் விழுகிறார்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று பாரதி அவர்களை எழுப்பிவிடுகிறார்.
அதன்பிறகு பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பாரதி இந்த ஒட்டுமொத்த மிஷின் ஒழுங்காக நடக்க அவங்க எடுத்துக்கொண்ட முயற்சி தான் ரொம்ப முக்கியமானது, ஒவ்வொரு விஷயத்துக்கும் புதுப்புது ஐடியா உருவாக்குனது அவங்கதான், அது வேற யாரும் இல்ல எங்க ஹாஸ்பிடலோட அட்மின் ஆபீசர் கண்ணம்மாதான், அப்படின்னு சொல்ல எல்லோரும் கை தட்டுறாங்க. மேலும் சௌந்தர்யாவும் ஆனந்த கண்ணீர் விடுகிறார் இதோடு ப்ரோமோவும் முடிவடைந்தது.
மருத்துவ ஊழியர்கள் அனைவரும் ஹீரோக்களே.. ❤️
பாரதி கண்ணம்மா – திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/D9bDLBTIRt
— Vijay Television (@vijaytelevision) May 17, 2022