விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் கடந்த 8 வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்று தெரியாமல் கண்ணம்மாவின் மகள் வளர்ந்து வருகிறார். எனவே சமீபத்தில் கண்ணம்மா தனது பிறந்தநாள் அன்று உனது அப்பா யாரென்று நான் அனைவர் முன்பும் கூறுகிறேன் என்று லட்சுமியிடம் கூற லக்ஷ்மியும் தனது அப்பாவின் வருகைக்காக மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறாள்.
எனது அப்பாவை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும் என்பதற்காக அவளால் முடிந்த பல விஷயங்களை செய்து வருகிறாள். லக்ஷ்மி எந்த அளவிற்கு தனது அப்பாவை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்து வருகிறாளோ அதேபோல் ரசிகர்களும் அந்த எபிசோடுக்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரையிலும் கண்ணம்மாவின் பிறந்தநாளன்று நான் வரமாட்டேன் என்ற மறுத்து வரும் பாரதியை எப்படியாவது கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்து போய் விட வேண்டும் என்று சௌந்தர்யா மற்றும் கண்ணமா இருவரும் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் எதற்கும் அடங்காத பாரதி தற்போது தனது மகளை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த தகவலை வெண்பாவிடம் கூற இது நல்ல முடிவுதான் நீ இங்கே இருந்தால் எப்படியாவது உன்னை கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு கலந்து கொள்ள வைத்து விடுவார்கள் என்று கூற பாரதி உடனே புக் செய்த இரண்டு டிக்கெட்டையும் வெண்பா விடம் கொடுக்கிறான்.
அந்த இரண்டு டிக்கெட்டையும் பார்த்தவுடன் முதலில் வெண்பா தனக்கு ஒன்று பாரதிக்கு ஒன்று என நினைத்துக்கொண்டாள் ஆனால் பாரதி எனது மகள் ஹேமா அவையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி வெண்பாவிற்கு செம பல்பு கொடுத்தார். ஆனால் ஹேமா கண்டிப்பாக போக மாட்டார் ஏனென்றால் சமையல் அம்மா பிறந்தநாள் இருப்பதால் போக மறுத்து விடுவாள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக பாரதியை சென்னையிலேயே இருக்க வைத்து அதன் பிறகு கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு வர வைக்க உள்ளனர்.
இவ்வாறு இந்த சமயத்தில் வெண்பாவின் சித்தப்பா பாரதியிடம் அனைத்து உண்மைகளையும் கூற உள்ளார். கண்ணம்மா தப்பான வழியில் போகவில்லை என்றும் லக்ஷ்மி பாரதியின் மகள் தான் என்றும் தெரிவிக்கவுள்ளார்கள். பிறகு தனது இரு மகள்கள் மற்றும் பாரதி, கண்ணம்மா சௌந்தர்யா என அனைவரும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக வாழ போகிறார்கள்.