விஜய் டிவியில் நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்தவகையில் டிஆர்பி யில் முன்னணி நாடகமாக இருந்து வரும் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது ஆனால் தற்போது ஒரு மாத காலமாக டி ஆர் பி எல் இடம் பிடிக்கவில்லை.
இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சம்பாதித்து முன்னணி நடிகையாக வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் பல நடிகைகள் தங்களது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது போன்ற பல செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அதுபோலவே நடிகை ஃபரீனாவும் அப்படி ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் உங்களின் கணவர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஃபரீனாவும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.