பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி மற்றும் கண்ணம்மா.! புகைப்படத்தை பார்த்து காத்து கூட புகாது போல என கூறும் ரசிகர்கள்.

bharathi kannama 3
bharathi kannama 3

சின்னத்திரையில் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களைக் கவரும் வகையில் கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதிய நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ்-தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகளும் விஜய் டிவி டப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பெரும்பாலும் சீரியல் குடும்பம் மற்றும் காதலை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறது.

அந்த வகையில் சில சீரியல்கள் தற்போது TRP-யில் தொடர்ந்து முன்னணி நாடகமாக வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ஒரு சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் இடையில் இந்த சீரியலின்  கதாநாயகன் கதாநாயகியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார். அந்த கதாநாயகி மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு பையைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றுவார் இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கிண்டலடிக்க பட்டது.

இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு என்று கூறி ஓரளவிற்கு கதையை மாற்றி உள்ளார்கள். இந்த எபிசோடுகள் முன்போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருபவர்கள் அருண் மற்றும் ரோஷினி.

நடிகர் அருண் இதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் சின்ன ரோலில் பார்த்திருப்போம் ஆனால் ரோஷனி முதல் முறையாக இந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த எபிசோடில் இவர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் அவார்டு பங்ஷனில் கலந்து கொண்டு விஜய் டிவியில் இருவரும் அவார்டு வாங்கிவுள்ளார்கள். அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவை ஒன்றாக சேர்த்து பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

bharathi kannama 2
bharathi kannama 2