விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
அந்த வகையில் சின்னத்திரையில் நடித்து வரும் சின்ன குழந்தை நட்சத்திரங்கள் முதல் நடிகைகள் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர்கள். அந்தவகையில் கொரோனா லாக்டவும் போட்ட நேரத்தில் தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் கண்மணி.
பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் கண்ணம்மாவின் வில்லியாக நடித்து வந்த இவர் திடீரென்று மாறி தனது அக்காவுக்கு உதவும் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
இவ்வாறு மிகவும் நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் திடீரென்று கண்மணி பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகினார். என்னதான் இவர் துணை கேரக்டராக நடித்து வந்தாலும் இவருக்கு என்று ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்ததால் ரசிகர்கள் அனைவரும் வருத்தமடைந்த வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த சீரியலின் ப்ரோமோ 1 இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிறகு சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் தனது அம்மாவுடன் பங்கேற்றார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகி இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.