தமிழ் திரை உலகில் குறைந்த வயதிலேயே சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்த பிரபலங்கள் பலரும் ஆரம்பத்தில் ஒரு சில சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பிடிப்பது வழக்கம் அப்படி தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்தார் பரத்.
இவர் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இப்படத்தை தொடர்ந்து செல்லமே, காதல், பிப்ரவரி 14, பட்டியல், எம்டன் மகன் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்ததோடு மட்டுமில்லமால் இவருக்கு நல்லதொரு இமேஜை ஏற்படுத்தியது இதன் மூலம் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.
இப்படி வந்து கொண்டிருந்த இவர் திடீரென சரியான படங்களை தேர்வு செய்யாததால் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.இருப்பினும் இவர் தனது விடா முயற்சியின் மூலம் தற்போது வருகின்ற ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த காளிதாஸ் இவருக்கு ஒரு நல்ல இமேஜை கொடுத்தது.
இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த தொடங்கியுள்ளார். தற்பொழுது இவர் சினிமா திரை உலகில் நடுவன், பெயர் சூட்டப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் மேலும் பல படங்களில் நடிக்கயுள்ளார். அத்தகைய படங்களுக்காக தனது உடலமைப்பை மிகப்பெரிய அளவில் முறுக்கேற்றி உள்ளார்.
இவர் இதற்கு முன்பு 555 என்ற திரைப்படத்தில் முரட்டுத்தனமாக உடம்பை ஏற்றி பிறகு தற்போதுதான் ஒரு புதிய படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து முரட்டுத்தனமாக உடம்பைக் இயற்றி உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.