இந்த உடம்பை வச்சுக்கிட்டு பரத நாட்டியம்மா.. ஜோதிகாவை கிண்டல் செய்த படக்குழு.? வெறியோடு ஆடி அசத்திய சம்பவம்.! கலா மாஸ்டர் சொல்லும் உண்மை.

jothika
jothikajothika

நடிகை ஜோதிகா ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என சூப்பராக ஆரம்பத்திலேயே இருந்ததால் பட வாய்ப்புகள் ஏராளமாக கிடைத்தன. இந்தப் படத்தில் தனது திறமையையும் சிறப்பாக காட்டி நடித்ததால் வெற்றி மேல் வெற்றியை கொடுத்தார். முதலில் இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் விஜய், சூர்யா, அர்ஜுன், கமல் போன்ற டாப் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து ஓடினார். இதனால் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தவர். திடீரென சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் சிறிது காலம் இடைவெளி விட்ட பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதுவும் சோலோ ஹீரோயினாக நடித்து வெற்றி கண்டு வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகா நடனமாட பயந்த காலங்களும் உண்டு. இவர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.

இந்த படத்தில் பரதநாட்டியம் ஜோதிகா ஆட வேண்டும் ஆனால் பரதநாட்டியம் என்ற உடனேயே பலரும் ஜோதிகாவை கிண்டலும் கேலியும் செய்தனர். அவரது காதில் படும்படி இவ்வாறு சொன்னது அவரை சற்று வருத்தமடைய செய்தது ஜோதிகாவுக்கும் என்னால் ஆட முடியுமா என்ற பயமும் அப்பொழுது தோன்றியது தான்.

ஆனால் கலா மாஸ்டர் உனக்கு ஏற்றபடி நடனத்தை அமைத்து தருகிறேன் என கூற பின் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடனத்தை சரியாக பின்பற்றி சந்திரமுகி படத்தில் நாட்டியம் அழகாக ஆடி அசத்தினார். அதன்பின் அந்த படத்தில் பணியாற்றிய ரஜினி இயக்குனர் வாசு போன்றவர்கள் ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.