குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பும் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.!

cook-with-comali-04
cook-with-comali-04

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பொதுவாக எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் ஒரு முறைக்கு மேல் போர் அடித்து விடும் ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்து எத்தனை முறை பார்த்தாலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது எனவே இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வரையிலும் மூன்று சீசன்கள் மிகவும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது நான்காவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் இரவு 9:30 மணி அளவில் இந்நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து திரை பிரபலங்கள் போட்டியாளர்களாகவும், கோமாளிகளாகவும் பங்கு பெற்று வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீசனில் எட்டு திரை பிரபலங்கள் பங்குபெற இருக்கின்றனர் நாளை மறுநாள் முதல் இந்நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கும் நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவே இந்நிகழ்ச்சியில் யார்? யார்? குக்குகளாகவும், கோமாளிகளாகவும் கலந்த கொள்ள இருக்கிறார்கள் என்பது ஓரளவிற்கு தெரிய வந்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பிரபலம் ஒருவர் பங்கு பெற்று இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் தான் தொகுப்பாளர் விஷால். தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்தான் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்டு இருக்கிறார்.