விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலில் 25 வருடங்களாக தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணமாக ராதிகாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கோபி.
ஆனால் இந்த விஷயம் பாக்கியத்திற்கு தெரியாமல் ரகசியமாகவே கோபி பல முடிவுகளை எடுத்து வருகிறார் ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கோபி ஒற்றைக் காலில் நிற்கிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கோபியின் இளைய மகன் எழில் கணவனை இழந்து தன்னந்தனியாக நிற்கும் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். முதலில் எழிலின் காதலை மறுத்து வந்தார் அமிர்தா அதன்பிறகு எழில் மிகவும் நல்லவர் நல்ல குணமுள்ளவர் என தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக எழிலின் காதல் வலையில் விழுகிறார்.
அதேபோல் எழிலும் திருமணம் செய்து கொண்டால் அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார் எழில் தன்னுடைய தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருக்கும் அமித்ஷாவுடன் மிகவும் நெருங்கிப் பழகி வருகிறார் அதனை நோட்டமிட்டு செழியன் தன்னுடைய பாட்டியிடம் போட்டு கொடுக்கிறான். அதேபோல் பாட்டியும் எழில் மற்றும் அமிர்தா இருவரும் நண்பர்கள் போல் பழகவில்லை காதலர்கள் போல் பழகுகிறார்கள் என தெரிந்து கொண்டு அமிர்தாவை விட்டு விலகி இருக்குமாறு அறிவுரை கூறுகிறார்.
அதற்கு எழில் அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார். கடைசியில் வீட்டை விட்டு வெளியேறிய எழில் அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவில் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருக்கிறார் கடைசியில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது எப்பொழுது என தெரியவில்லை அதே போல் பாக்கியம் எழிலின் காதலை புரிந்துகொண்டு எழில் மற்றும் அமிர்தாவை சேர்த்து வைக்க உறுதுணையாக நிற்கப் போகிறார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க நினைக்கும் எழில் இடம் இவ்வளவு கோபமாக நடந்துகொளிறாரே கோபியின் அம்மா ஆனால் கோபி கட்டுன பொண்டாட்டியை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போகும் கோபியின் விஷயம் தெரிந்தால் அவர் தாங்க மாட்டார்.
கடைசியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.