விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் நடித்தவரும் அனைத்து கதாபாத்திரங்கள் இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இந்த சீரியலும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டர் தான் சமீப காலங்களாக இவர் நிலைமை ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் புதிய சீரியல் ஒன்றில் இணைந்திருக்கும் நிலையில் அது குறித்து வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட தற்பொழுது அது வைரலாகி வருகிறது.
அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது ரஞ்சித் நடித்துவரும் நிலையில் இதற்கு மேல் பாக்யா, ரஞ்சித், ராதிகா இவர்களுடைய கேரக்டர் தான் அதிக அளவிலிடம் பெற இருக்கிறது கொஞ்சம் கோபி நடித்து வரும் காட்சிகள் குறையும் என அவரே வீடியோ மூலம் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப வீடியோ ஒன்றில் நெத்தியில் சந்தனம் ஒன்றை வைத்துக்கொண்டு சந்தனத்தை பார்க்கும் பொழுதே தெரிந்திருக்கும் நான் இப்பொழுது கேரளாவில் இருக்கிறேன் கடந்த மூன்று நாட்களாக கேரளா ஷூட்டிங்கில் இருந்து வருவதாக கூறி இருக்கும் நிலையில் இது குறித்து விரைவில் நல்ல தகவலை கூறுவதாகவும் அறிவித்துள்ளார்.
எனவே இதனை பார்த்த ரசிகர்கள் அப்பனா புதிய சீரியல் ஒன்றில் நடிக்கப் போகிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் விரைவில் சதீஷ் தன்னுடைய புதிய சீரியல் பற்றிய தகவலை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.