அழகு பதுமை போல் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவி.! அட இவரும் ஒரு நடிகையாமே..

bhagyalakshmi1

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கொரோனா பிரச்சனையினால் பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது ஒரு சில சீரியல்கள் முற்றிலும் வேறு பலான கதை உடன் தொடங்கியது இன்னும் மற்ற சீரியல்கள் புதிதாக அறிமுகமாகியது.

அந்த வகையில் புதிதாக அறிமுகமாகிய சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது அதுவும் முக்கியமாக இல்லத்தரசிகளின்  மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏனென்றால் குடும்பத்தில் உள்ள இல்லதரசி எவ்வளவு அவமானங்கள் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் சில புதுமுக நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி உள்ளார்கள்.

தற்போது டி.ஆர்.பி-யில் முன்னணி வகிக்கும் நாடகங்களில் ஒன்றாக இந்த சீரியல் விளங்குகிறது. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு புதிதாக அறிமுகமாகியவர்தான் சதிஷ்.  இவர் இந்த சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இவரும் இந்த சீரியலின் ஆரம்பத்தில் சரியாக நடிக்கவில்லை என்று கூறி வந்தார்கள். ஆனால் தற்பொழுது மிகவும் அற்புதமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ சதீஷின் மனைவி புகைப்படம்.

serial actor
serial actor