தமிழ் சினிமாவின் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பாக்யராஜ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் 41 நாள் குழந்தையாக நடித்திருந்த குழந்தை இன்று பிரபல நடிகையாக தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
அதாவது 1983ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாகியராஜின் முதல் மனைவி இறந்திருப்பார் எனவே பாக்யராஜ் தன்னுடைய 41 நாள் குழந்தையை தனியாக பார்த்து வரும் நிலையில் பாக்யராஜ் கஷ்டப்படுவதை பார்க்கும் ஊர்வசி அந்த குழந்தையை பார்த்துக் கொள்வார் மேலும் இவர்களைத் தொடர்ந்து பலரும் நடித்திருந்த நிலையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
அந்த வகையில் அந்த 41 நாள் குழந்தையாக நடித்தது வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை சுஜிதா தான். இவர் முந்தானை முடிச்சு படத்திற்கு பிறகு சத்யராஜின் பூவிழி வாசலிலே, ரஜினியின் மனிதன், மோகன் நடித்த பாடு நிலவே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ரோஜா, தேவர் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வளர்ந்ததற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடித்து தற்பொழுது சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் திரைவுலகை சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.