சின்னத்திரையில் ஒட்டுமொத்த குடும்பங்களையும் கவர்ந்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இதில் இன்றைய எபிசோடில் கோபியை பற்றிய அனைத்தும் தெரிந்து கொண்டு உறைந்து போய் நிற்கும் பாக்கியா கோபியிடம் சரமாரியாக நிற்க வைத்து மாறி மாறி கேள்வியை கேட்டு வருகிறார்.
அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து வருகின்ற நிலையில் எழிலும் அப்பாவைப் பற்றிய உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும் சொன்னால் அம்மா கஷ்டப்படுவார்கள் என்பதற்காக நான் இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்தேன் என கூறுகிறார். தாத்தாவும் ஒரு பக்கம் இவன் ஒரு பொம்பள பின்னாடி போய் எவ்வளவோ நாளாச்சு திருந்துவான்னு நெனச்சேன் திருந்தவே இல்லை
இன்னும் அப்படியே தான் இருக்கான். ஆனால் ஈஸ்வரி தன் மகனைப் பற்றி மாறிமாறி குறை சொல்வதை நம்பாமல் என் பையன் அப்படி கிடையாது என கூறுகிறார். பாக்கியா இவர் ஹாஸ்பிடலில் எனக்கு முன்னாடியே வேறு ஒருவருக்கு போன் செய்து வர வைத்து உள்ளார் அவங்க தான் இவரோட மனைவி என்று இவர் கூடவே இருந்தாங்க..
இதையெல்லாம் பார்த்துவிட்டு நான் எப்படி இவரை போய் பார்ப்பது நான் எப்படி வீடு வந்து சேர்ந்தேனே தெரியவில்லை எனக் கூறுகிறார் பின்பு ஈஸ்வரி அது யார் தான் என கேட்கும் போது பாக்கியா கோபியை பார்த்து சொல்லுங்க அத்தை கேக்குறாங்க இல்ல நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டா என என கேட்டதும் கோபி திரு திருவென முழித்து..
கொண்டே நிற்கையில் பாக்கியா அது ராதிகா தான் என்று கூறியுள்ளார் இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது. இதை கேட்ட ஈஸ்வரி என்ன முடிவெடுப்பார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர்.