தொடர்ந்து வெற்றியை அள்ளி வரும் இயக்குனர் அட்லீ இப்பொழுது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படம் ஒரு வழியாக அடுத்த வருடம் வெளியாகும் என கூறியது படக்குழு.
ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, ப்ரியாமணி, மல்கோத்ரா மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாக கொண்டு ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா அண்மையில் திருமணம் செய்து கொண்டார் அந்த திருமணத்தை ஷாருக்கான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இந்த படத்தில் நடிக்காமல் தற்போது ஹனிமூனுக்காக சுற்றி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பட சூட்டிங்கை தொடங்காமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. படக்குழு இந்த படத்தின் கதைப்படி ஒரு முக்கிய நடிகரை இந்த படத்தில் இழுத்து போடாத போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமல்ல.. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதி.
ஜவான் படத்தில் நடிக்க வைக்க தற்போது படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பாகுபலி படத்தில் நடித்ததை தொடர்ந்து ராணா டகுபதி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் தற்போது ஷாருக்கானுடன் இணைந்தால் அவரது சினிமா பயணம் ஒரு உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.