பாகுபலி பட நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? வெளிவந்த செய்தி.

anushka
anushka

தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. ஆரம்பத்தில் ரசிகர்களை கவரும்படி காதல் திரைப்படங்களில் நடித்து தனது திறமையை காட்டியதால் ரசிகர் கூட்டம் இவரை ஆரம்பத்திலேயே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது இவரும் தொடர்ந்து நன்றாக நடித்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் காதல் படங்களை தவிர்த்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்த காரணத்தினால் அவரது சினிமா பயணம் அதிகரித்த வண்ணமே இருந்தது இந்த நிலையில் அவருக்கு சோலோ படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

அந்தவகையில் ருத்ரமாதேவி, அருந்ததி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்களில் நடித்தார் இது நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன இப்படி இருக்கின்ற நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை தாறுமாறாக ஏற்றினார் அதை குறைத்து விடலாம் என கணக்கு போட்டார் ஆனால் எதிர்பாராதவிதமாக உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறினார்.

இந்த நிலையில் அவர் பாகுபலி படத்திலும் கமிட் ஆகினார் ஆனால் படக்குழு vfx மற்றும் பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை உடல் எடையை குறைத்தது போல அந்த படத்தில் காட்டினர் அதன் பின்  பெரிய அளவில் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைப்பது தற்போது பழைய நிலைமைக்கு மீண்டுள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்புகள் தற்போதுதான் கிடைக்க ஆரம்பித்துள்ளது இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு சுமார் 110 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.